பாகிஸ்தானிலிருந்து வெளியோறுவோம்: கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மிரட்டல்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
14Shares

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களாக விளங்கும் கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பன பாகிஸ்தானில் இருந்து வெளியேறவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

பாகிஸ்தான் அரசு விஸ்தரித்துள்ள கட்டுப்பாடுகளை அடுத்தே இந்த மிரட்டலை மூன்று நிறுவனங்களும் கூட்டாக விடுத்துள்ளன.

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் கடந்த புதன் கிழமை அரச ஊடக கட்டுப்பாட்டுச் சபைக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. எனவே தொழில்நுட்பங்களால் கலாச்சாரம் சீரழிவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் என்பன சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தவிர புதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சமூகவலைத்தள நிறுவனங்கள் மற்றும இணைய சேவை வழங்குனர்கள் மீது 3.14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தை அவமதித்தல், பயங்கரவாதத்தை பிரபல்யப்படுத்தல், வெறுக்கத்தக்க பேச்சுகள், ஆபாச படங்களை பகிர்தல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தம் விளைவித்தல் என்பவற்றின் அடிப்படையில் மேற்கண்ட அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்