இவ் வருடம் இடம்பெற்ற சைபர் கிரைம் முறைப்பாடுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
8Shares

தற்போதைய அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஆண்டுதோறும் எண்ணற்ற சைபர்கிரைம் செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன.

இது மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட இந்தியாவிலும் மிக அதிகமாகவே காணப்படுகின்றது.

இதேவேளை சைபர் கிரைம் தொடர்பாக இந்தியாவிலேயே அதிக முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டு இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளில் 62 சதவீதமானவை பணத்துடன் தொடர்புடைய சைபர் மோசடிகளாகும்.

இந்த தகவலை டெல்லி பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

தவிர சமூகவலைத்தளங்கள் தொடர்பாக 24 சதவீத முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், 14 சதவீதமானவை ஹேக்கிங் மற்றும் தகவல் திருட்டு என்பன தொடர்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்