புதிய மைல்கல்லை எட்டியது 5G பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
84Shares

தென்கொரியாவில் 5G பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த வருடம் நொவெம்பர் மாதம் வரையில 10.9 மில்லியன் வரையிலான பயனர்கள் இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இது அங்குள்ள மொத்த மொபைல் பாவனையாளர்களின் எண்ணிக்கையில் 15.5 சதவீதமாகும்.

அங்கு மொத்தமாக 70.5 மில்லியன் வரையானவர்கள் மொபைல் பாவனையாளர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் எஞ்சியவர்கள் 5G தொழில்நுட்பத்திற்கு முன்னர் அறிமுகமாக மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துபவர்கள் ஆவர்.

ஐபோன் 12 அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மாத்திரம் ஒரு மில்லியன் வரையானவர்கள் ஒரே மாதத்தில் 5G வலையமைப்பிற்கு மாறியுள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்