இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை

Report Print Jubilee Jubilee in ரெனிஸ்
இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை
130Shares
130Shares
lankasrimarket.com

குயின்ஸ் கிளப் கிண்ண சர்வதேச டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

குயின்ஸ் கிளப் கிண்ண சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே, கனடா வீரர் மிலோஸ் ரானிச்சை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மிலோஸ் ரானிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த பட்டத்தை ஆன்டி முர்ரே ஏற்கனவே 2009, 2011, 2013, 2015ம் ஆண்டுகளில் வென்றிருந்தார். இதன் மூலம் இந்த பட்டத்தை 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் இந்த போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை அதிக முறை வென்ற வீரர் என்ற பெருமையையும் ஆன்டி முர்ரே பெற்றுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments