புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்

Report Print Basu in ரெனிஸ்
புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்கா நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300வது வெற்றியைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் அன்னிகா பெக்கை எதிர்கொண்டார்

இதில் செரீனா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அன்னிகா பெக்கை தோற்கடித்தார்.

அன்னிகா பெக்கை வீழ்த்தியதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 300-வது வெற்றியைப் பதிவு செய்தார் செரீனா.

விம்பிள்டன் போட்டியின் அடுத்த சுற்றில் ஸ்வெட்லானாவை சந்திக்கிறார் செரீனா.

ஓபன் எராவில் கிராண்ட்ஸ்லாமில் அதிக வெற்றிகளைக் குவித்தவர்கள் வரிசையில் செரீனா 2-ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் மார்ட்டினா நவரத்திலோவா உள்ளார். அவர் 306 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

விம்பிள்டனில் மட்டும் செரீனா 82 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் "ஓபன் எரா'வில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (22) வென்றவரான ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments