டோனி ஸ்டைலில் பதிலளித்த ஆண்டி முர்ரே: விழிபிதுங்கி போன நிருபர்

Report Print Jubilee Jubilee in ரெனிஸ்

ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் தங்கம் வென்ற ஆண்டி முர்ரே டோனி பானியில் நிருபருக்கு பதிலளித்து வைரலாகியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் 2016 பிரேசில் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் பிரிட்டன் வீரரான ஆண்டி முர்ரே அர்ஜெண்டினாவை சேர்ந்த டேல் பெட்ரோவை வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

இதற்கு முன்னால் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் இவர் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிவில் இவரை பேட்டியெடுத்த நிருபர் ஜான் இன்வர்டேல் என்பவர், இரண்டு தங்கம் வென்ற முதல் மனிதர் நீங்கள் தான், இது உங்களுக்கு மிகப் பெரிய சாதனை தானே என கேட்டார்.

இதற்கு ஆண்டி முர்ரெ, இதற்கு முன்னால் வீனஸ், செரீனா ஆகியோர் 4 தங்கங்களை வென்றுள்ளனர். ஒற்றையர் பிரிவில் தான் இதுவரை யாரும் தங்கத்தை தக்கவைத்துக் கொள்ளவில்லை என நேர்த்தியாக பதிலளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் இந்த பேட்டி வைரலாக பரவியது. வலைதளவாசிகள் அனைவரும் முர்ரேயின் பதிலுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆன்டி முர்ரேயின் இந்த பதில் டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவிய போது டோனி அளித்த பேட்டியோடு ஒப்பிட்டும் சமூக வலைதளங்களில் நிருபரை விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில், பேட்டியின் நேரடி ஒளிபரப்பின் போது இந்த நிருபரின் கேள்விகளுக்கு கடுப்பாகி பிரிட்டன் முன்னாள் படகோட்டும் வீரர் சார் ஸ்டீவ் ரெட்கிரேவ் என்பவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments