விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்ற நடாலின் திட்டம் என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ரெனிஸ்
96Shares
96Shares
ibctamil.com

தொடக்க சுற்றுகளில் வெற்றி பெற்றுவிட்டேன் என்றால், விம்பிள்டன் பட்டம் எனக்குத்தான் என்று நடால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ரபெல் நடால்(31). இவர் இந்த வருடத்திற்கான பிரெஞ்ச் ஓபனை வென்றதன் மூலம் 10 முறை பிரெஞ்சு ஓபனை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒரு வீரர் 10 முறை ஒரே கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் என்ற பெருமை படைத்த நடால், செம்மண் தரையில் அபாரமாக விளையாடக்கூடியவர்.

ஆனால், புற்தரையில் (அவுஸ்திரேலியா, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன்) 5 முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த வருடத்திற்கான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் யூலை 3-ஆம் திகதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த தொடர் இதுவரை நடாலுக்கு ராசியாக அமைந்ததில்லை. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து நான்காவது சுற்றுக்கு மேல் முன்னேறியது கிடையாது. இதில் நான்கு முறை தரவரிசையில் 100-க்கு மேல் உள்ள வீரர்களிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் முதல் நான்கு சுற்றில் வெற்றி பெற்றுவிட்டால், விம்பிள்டன் சாம்பியன் பட்டம் எனக்குத்தான் என்று நடால் கூறியுள்ளார். நடால் முதல் சுற்றில் 137-வது இடத்தில் இருக்கும் மில்மானை சந்திக்க உள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments