விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

Report Print Santhan in ரெனிஸ்
126Shares
126Shares
ibctamil.com

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி பிரித்தானிய தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே மற்றும் அமெரிக்காவின் 24-ஆம் நிலை வீரரான சாம் கெர்ரி மோதினர்.

இப்போட்டியில் முர்ரே தான் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை அனைத்தையும் முறியடித்து அதிர்ச்சி அளித்தார் கெர்ரி.

கெர்ரி முதல் செட்டை கைப்பற்ற, இரண்டாம் செட்டை முர்ரே கைப்பற்ற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்றாவது செட்டை முர்ரே கைப்பற்றினார்.

சுதாரித்துக் கொண்டா கெர்ரி அடுத்தடுத்து இரண்டு செட்டுகளை கைப்பற்றி முர்ரேவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இறுதியில் 3-6, 6-4, 6-7 (4-7), 6-1, 6-1 என்ற செட்கணக்கில் கெர்ரி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம், 2009-ஆம் ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் ஆண்டிரோடிக் அரையிறுதிக்கு முன்னேறிய பிறகு, கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை கெர்ரி பெற்றுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments