விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்?

Report Print Arbin Arbin in ரெனிஸ்
141Shares
141Shares
ibctamil.com

விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் ஆகிய டென்னிஸ் தொடர்களின் சில போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி கிராண்ட்ஸ்லாம் தொடர்களாகக் கருதப்படும் விம்பிள்டன் தொடரின் 3 போட்டிகளிலும், பிரெஞ்சு ஓபனின் ஒரு போட்டியிலும் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் உள்ளிட்ட புகார்களை விசாரிக்கும் டென்னிஸ் ஒருங்கிணைந்த பிரிவு (TIU) அமைப்பு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் யூன் வரையிலான காலகட்டத்தில் டென்னிஸ் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக 53 புகார்கள் பெறப்பட்டதாக டிஐயு அமைப்பு தெரிவித்துள்ளது.

விம்பிள்டன் தொடரைப் பொறுத்தவரை 2 புகார்கள் தகுதிப் போட்டிகளின் போதும், ஒரு புகார் தொடரின் முக்கிய போட்டிகளின் போதும் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments