முகுருசாவை பின்தள்ளி முதலிடம் பெற்றார் ஹாலெப்

Report Print Thayalan Thayalan in ரெனிஸ்
முகுருசாவை பின்தள்ளி முதலிடம் பெற்றார் ஹாலெப்
11Shares
11Shares
ibctamil.com

ருமேனிய நாட்டின் முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப் உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதன்முறையாக முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.

சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்றுவரும் சீன ஓபன் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் நேற்றைய பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டி ஒன்றில் ஹாலெப், லாத்தியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

குறித்த போட்டியில் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜெலினாவை வீழ்த்திய ஹாலெப் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இந்தப் போட்டியில் ஹாலெப் வெற்றி பெற்று இதுவரையில் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த முகுருசாவை பின்தள்ளி முதலிடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்