மீண்டும் களமிறங்கும் செரீனா: உற்சாகத்தில் ரசிகர்கள்

Report Print Deepthi Deepthi in ரெனிஸ்

கர்ப்பகால ஓய்வுக்கு பின்னர் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க ஓபன், ப்ரெஞ்ச் ஒபன், விம்பிள்டன், அவுஸ்திரேலியா ஓபன் என பல்வேறு மகுடங்களுக்கு சொந்தக்காரரான செரினா, தனது குழந்தை பிறப்பிற்காக ஓய்வில் இருந்தார்.

குழந்தை பிறந்து 3 மாதகால ஓய்வுக்கு பின்னர் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். அதன்படியே, அபுதாபியில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஓஸ்டபென்கோவை எதிர்த்து செரினா விளையாடவுள்ளார்.

அவுஸ்திரேலிய ஓபனுக்கு ஆயத்தமாகும் வகையில், தற்போது மீண்டும் போட்டிக் களத்திற்கு செரினா திரும்புகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செரினா வில்லியம்ஸ், என் மகள் பிறந்த பிறகு முதன்முறையாக அபுதாபில் மீண்டும் களமிறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்