ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி டென்னிஸ் வீரர்

Report Print Kabilan in ரெனிஸ்

ஜேர்மனியின் டென்னிஸ் வீரர் டாமி ஹாஸ், சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் டாமி ஹாஸ்(39). இவர், இந்தியன் வெல்ஸில் நடைபெற்ற ஏடிபி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இதுவரை 15 ஒற்றையர் பட்டங்களை டாமி ஹாஸ் வென்றுள்ளார். அத்துடன், உலக டென்னிஸ் தரவரிசையில் 2வது இடம் வரை முன்னேறியுள்ளார்.

இதுவரை 8 முறை Top 20 தரவரிசையில் இடம்பெற்றுள்ள டாமி, கடைசியாக 2013ஆம் ஆண்டு வியன்னா மற்றும் மூனிச்சில் நடந்த ஏடிபி போட்டிகளில் பட்டம் வென்றிருந்தார்.

தனது ஓய்வு குறித்து டாமி ஹாஸ் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக நான் தொழில்முறை டென்னிஸ் விளையாடி வருகிறேன். இது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்.

டென்னிஸ் விளையாட்டால் எனக்கு சிறப்பான நண்பர்கள் கிடைத்தனர். உலகம் முழுவதும் சுற்றி டென்னிஸ் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

இந்தியன் வெல்ஸி ஏடிபி போட்டியில், டாமி ஹாஸ் இயக்குனராகவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Reuters
Reuters

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்