34 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரபேல் நடால்

Report Print Kabilan in ரெனிஸ்

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், களிமண் தரை மைதானங்களில் தொடர்ந்து 50வது செட்டை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் களிமண் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் ‘Round-16' சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜெண்டினாவின் டீகோவை சந்தித்தார்.

தனது சொந்த மண்ணில் விளையாடிய நடால், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இதன் மூலம், களிமண் தரையில் விளையாடிய போட்டிகளில் தொடர்ந்து 50 செட்களை கைப்பற்றியுள்ளார் நடால்.

இந்நிலையில், டென்னிஸ் உலகில் 34 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார் நடால். மேலும், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 16 கிண்ணங்களை வென்ற நடால், களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் மட்டும் 10 முறை கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் மெக்கன்ரோ தொடர்ச்சியாக 49 செட்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

REUTERS

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்