பிரெஞ்ச் ஓபனில் கலக்கிய செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிச்

Report Print Kabilan in ரெனிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், ஜோகோவிச் ஆகியோர் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ், தற்போது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகிறார்.

36 வயதான செரீனா 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு பின்னர், முதன் முறையாக இப்போது தான் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை எதிர்த்து விளையாடிய செரீனா, இரண்டாவது சுற்றில் 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றுள்ளார்.

EPA

இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர் ஜோகோவிச், ராபர்டோ பட்டிஸ்டுவாவை எதிர்த்து விளையாடினார்.

சுமார் 3.5 மணிநேரம் ஆடிய இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 6-4, 6-7, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Reuters

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers