முதல் நாள் போட்டியிலேயே குட்டி ரசிகையின் தூக்கத்தைக் கெடுத்த ரோஜர் பெடரர்

Report Print Balamanuvelan in ரெனிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் முதல் நாளே ஒரு குட்டி ரசிகையின் தூக்கத்தைக் கெடுத்தார் ஸ்விஸ் டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர்.

செர்பியாவைச் சேர்ந்த Dusan Lajovicஐ 6-1, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்திய சிறிது நேரத்தில், ஒரு ரசிகையை அவர் வீழ்த்திவிட்டார்.

Mihika Joshi என்னும் குட்டி ரசிகை ஒருத்தி எப்படியாவது ரோஜர் பெடரரின் கவனத்தை ஈர்க்க விரும்பி 'Roger can I have your headband please!!' என்று எழுதிய பளிச்சென்ற ஒரு மஞ்சள் அட்டையை அசைத்தவாறு நின்றாள்.

விளையாட்டை முடித்து விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் வழங்கிக் கொண்டிருந்த ரோஜர் பெடரரின் கவனத்தை ஒரு வழியாக அவள் ஈர்த்துவிட்டாள்.

அவளிடம் வந்த ரோஜர் பெடரர் தனது பையிலிருந்து ஒரு headbandஐத் தேடி எடுத்து அவளிடம் கொடுத்தார்.

கூடியிருந்த ரசிகர்கள் அவரது செயலைக் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். ரோஜர் பெடரரின் headbandஐப் பெற்றுக் கொண்டதும் வாயெல்லாம் பல்லாக அங்கிருந்து நழுவினாள் அந்தக் குட்டி ரசிகை.

விம்பிள்டனின் முதல் நாள் போட்டியிலேயே ஒரு குட்டி ரசிகையின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார் ரோஜர் பெடரர்.

நடந்தவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த Mihika Joshiயின் தந்தை “அவ்வளவுதான் என் மகள் இன்று இரவு தூங்க மாட்டாள்” என்றார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்