ஜாம்பவான் செரீனாவை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை

Report Print Arbin Arbin in ரெனிஸ்

விம்பிள்டன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செரீனா வில்லியம்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹாலெப்.

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிமோனா ஹாலெப் அதிரடியாக ஆடினார். இதனால் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்சை எளிதில் வென்றார்.

இதன்மூலம் விம்பிள்டன் டென்னிசில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்