ட்விட்டரில் கேட்ட ஒரு கேள்வி.. கனடா வீராங்கனையை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்!

Report Print Kabilan in ரெனிஸ்

கனடாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை Eugenie Bouchard, ட்விட்டரில் கேட்ட ஒரு கேள்விக்கு நெட்டிசன்கள் விதவிதமாக பதிலளித்து கிண்டல் செய்துள்ளனர்.

கனடாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான Eugenie Bouchard, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘Order செய்ய சிறந்த பிட்சா எது?’ என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டார்.

அதற்கு ரசிகர்கள் பலர் அவறை கிண்டல் செய்யும் விதமாக பதிலளித்துள்ளனர். ரசிகர் ஒருவர், ‘Genie Bouchard-விடம் இருந்து பிட்சாவை Order செய்ய சிறந்த வழி எது?’ என்று புரியாத வகையில் பதில்கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ரசிகர், ‘நீங்கள் உயிரோடு தான் இருக்கிறீர்கள், ட்வீட் மற்றும் பிட்சா உண்டுகொண்டிருக்கிறீர்கள்’ என கிண்டல் செய்துள்ளார்.

இன்னொரு ரசிகர், ‘கொஞ்சம் மாவு வாங்கிக் கொள்ளுங்கள், நீங்களே பிட்சா தயார் செய்துகொள்ளுங்கள்... என்னை நம்புங்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் ஒருபடி மேலேபோய், ‘நீங்கள் Order செய்துவிட்டு எதை சாப்பிடுவீர்களோ அதை Order பண்ணுங்களேன்’ என கிண்டலடித்துள்ளார்.

நெட்டிசன்கள் இவ்வாறு அவரை கிண்டல் செய்வதற்கு காரணம், Eugenie Bouchard ஏற்கனவே செய்த ஒரு செயல் தான். 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சூப்பர் பவுல் தொடரின் ஒரு போட்டியில், அட்லாண்டா அணி வெற்றி பெறும் என்று ட்விட்டரில் கூறி, ஆனால் அந்த அணி தோல்வியடைந்தால் ரசிகர் ஒருவருடன் டேட்டிங் செல்வதாக பந்தயம் கட்டினார்.

அப்போட்டியில் Eugenie Bouchard தோல்வியடையும் என்று கூறிய நியூ இங்கிலாந்து பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனால் ஜான் என்ற 20 வயது மாணவருடன் அவர் டேட்டிங் சென்றார்.

Getty Images

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்