பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - சாதனைபடைத்த ஜோகோவிச்

Report Print Abisha in ரெனிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியை நோவக் ஜோகோவிச் வென்று சாதனை படைத்துள்ளார்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இறுதி ஆட்டத்தில், முதல் நிலைவீரரான நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தி 5வது முறையாக சம்பியன்பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ 7 3/4கோடி பரிசுத்தொகையும் ஆயிரம் தரவரிசை புள்ளியும் வழங்கப்பட்டது.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34-வது முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பதை ஜோகோவிச் நெருங்கியுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்