மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் கிண்ணம் வென்ற செரினா: வெற்றி பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

Report Print Arbin Arbin in ரெனிஸ்

அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஆக்லாந்து டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்பாக ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

இதில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் பங்கேற்றார்.

இதன் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்ட செரினா வில்லியம்ஸ் முதல் செட்டை 6-3 என வென்றார்.

தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய செரினா வில்லியம்ஸ் 6-4 என சுலபமாக வென்றார்.

இறுதியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரினா வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை 6-3, 6-4 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் அரங்கில் சுமார் 3 ஆண்டுக்கு பின் முதல் முறையாக கிண்ணம் வென்று அசத்தினார் செரினா வில்லியம்ஸ்.

இதன் மூலம் தாயான பின்ன்னர் முதல் முறையாக கிண்ணம் வென்று சாதித்தார் செரினா.

மட்டுமின்றி இத்தொடரில் செரினா வென்ற மொத்த பரிசுத்தொகையான 43,000 டொலர்களை அவுஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார் செரினா வில்லியம்ஸ்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்