அவுஸ்திரேலியா ஓபன் ரெனிஸ்: அரையிறுதி சுற்றில் ஜோகோவிச்-பெடரர்!

Report Print Abisha in ரெனிஸ்

அவுஸ்திரேலியா ஓபன் ரெனிஸ் ஆடவர் அரையிறுதிக்கு ஜோகோவிச், ரோஜர்பெடரரும், மகளிர் பிரிவில் ஆஷ்லே பார்டி, சோபியாகெனினும் முன்னேறியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 2ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6(7-6) என்ற நேர் செட் கணக்கில் 32ஆம் நிலை வீரராக கனடாவின் மிலோஸ் ரவோனிச்சை வீழ்த்தினார்.

அரையிறுதியில் 3ஆம் நிலை வீரரான சுவிற்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்திக்கிறார் ஜோவிச்.

பெடரர் தனது கால் இறுதி சுற்றில் 100ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெனிஸ் சாண்ட்கிரெனை போராடி வீழ்த்தினார். முதல் செட்டை பெடரர் 6-3என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்களையும் 6-2, 6-2 என கைப்பற்றி பெடரருக்கு அதிர்ச்சி கொடுத்தார் சாண்ட்கிரென்.

4வது செட் டைபிரேக்குக்கு சென்றது. இதில் 38வயதாக பெடரர் 7மேட் பாயிண்ட்கள் பின் தங்கிய நிலையில் இருந்தார்.

ஆனால், அதன் பின்னர் போராடி இந்த செட்டை 7-6(10-8) என பெடரர் தன்வசப்படுத்தினார்.

வெற்றியை தீர்மானித்த 5வது செட்டை தனது அனுபவ ஆட்டத்தால் பெடரர் 6-3 என எளிதாக கைப்பற்றினார். முடிவில் 3 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெடரர் 6-3, 2-6, 2-6, 7-6 (10-8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

இதேபோல் மகளில் ஒற்றையர் பிரிவில், அவுஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியும், அமெரிகாவின் சோபியா கெனினும் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் 5ஆட்டங்கள் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், ஆஷ்லே பார்டி 4 ஆட்டங்களிலும், சோபியா கெனின் ஒரு ஆட்டத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்