17வது கிராணட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய ஜோகோவிச்!

Report Print Abisha in ரெனிஸ்

அவுஸ்திரேலியா ஓபன் ரெனிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவின் டொமினிக் தீமை 6-4, 4-6, 2-6,6-3, 64 என்ற கணக்கில் வீழ்த்தி செர்பியாவின் நோவன் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

முதல் செட்டில் வென்றிருந்தாலும் அடுத்த இரண்டு செட்களில் 4-6, 2-6 என்ற கணக்கில் இழந்த ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்களை 6-3, 6-4 என்ற கணக்கில் வென்று சாதித்தார்.

இது சர்வதேச அளவில் அவர் வெல்லும் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதேபோல் அவுஸ்திரேலியா ஓப்பனில் அவருக்கு 8வது பட்டமாகும்.

இந்த வெற்றிக்கு பின் பேசிய ஜோகோவிச் மெல்போர்ன் மைதானம் எனக்கு சாதகமான ராசியான மைதானம். உலகிலேயே பிடித்தமான விளையாட்டரங்கம் இதுவே. மீண்டும் கோப்பையை பெற ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

இளம் வீரர் டொமினிக் தீம் கண்டிப்பாக ஒருநாள் இந்த சிறப்பை அடைவார். வெற்றி அவர் அருகில் உள்ளது. பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்வார் என்று தெரிவித்தார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்