பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகிய ரோஜர் பெடரர்! மீண்டு திரும்பி வர காத்திருக்கிறேன் என்ற பதிவு

Report Print Abisha in ரெனிஸ்
52Shares

அறுவை சிகிச்சை காரணமாக பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரோஜர் பெடரர், தனக்கு நீண்ட காலமாக இருந்து வந்த மூட்டி வலிக்கு சிகிச்சை பெற போவதால், பிரெஞ்சு ஓபனில் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர், சுவிட்சர்லாந்தில் சிகிச்சை பெற உள்ளதால், மே 24ஆம் திகதி முதல் ஜுன் 7வரையில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

38 வயதான அவர், முடிந்தவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். ஆனால், முழங்கால் பிரச்சனை சரியாகாததால், தற்போது இந்த சிகிச்சைக்கு முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்ட பதிவி “சரியாகிவிடும் என்று நான் நம்பினேன், ஆனால் எனது குழுவுடன் ஓரு பரிசோதனை மற்றும் கலந்துரையாடலுக்குப் பிறகு நேற்ற சுவிட்சர்லாந்தில் ஆர்த்ரோலஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

"மீண்டு திரும்பி வர காத்திருக்கிறேன். போட்டி களத்தில் விரைவில் சந்திப்போம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்