மீண்டும் ஒன்றாக விளையாடும் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி! வைரல் வீடியோ

Report Print Abisha in ரெனிஸ்

ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்கும் இந்தியாவில், முன்னணி நட்சத்திர ரெனிஸ் வீரர்கள் ஜோடியின் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது இதனால், மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு முன்னணி நட்சத்திர ரெனிஸ் வீரரான லியாண்டர் பயஸ் #FryingPanChallengeக்கு அழைப்பு விடுத்தார். இதில், சமயல் பாத்திரம் கொண்டு, ரெனிஸ் பால் தட்டுவது போன்று இந்த வீடியோ அமைந்துள்ளது.

இதற்கு மகேஷ் பூபதியும் அதுபோன்ற சமயல் பாத்திரம் கொண்டு விளையாடும் வீடியோவை வெளியிட்டார்.

இந்த இரண்டு வீடியோக்களையும் இணைந்து லியாண்டர் பயஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், இரண்டு பேரும் இணைந்து விளையாடுவதை காண ஆசைப்பட்டவர்களுக்கானது என்று பதிவிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தந்துள்ளது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்