முன்னாள் டேபிள் ரெனிஸ் சேம்பியன் கனடாவில் காலமானார்!

Report Print Abisha in ரெனிஸ்

டேபிள் டென்னிஸ் முன்னாள் சேம்பியன் மன்மீத் சிங் (வயது 58) ஏமையோட்ராபிக் லேட்டரல் ஸ்க்ளிரோசிஸ் என்கிற நரம்புக் கோளாறு நோயால் காலமானார்.

கடந்த இரு வருடங்களாக இந்நோயால் பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்துள்ளது.

தேசிய ஜூனியர் சாம்பியன், தேசிய இரட்டையர் சேம்பியன் ஆகிய பட்டங்களை முதலில் வென்ற மன்மீத் சிங், 1989-ல் ஸ்ரீராமைத் தோற்கடித்து ஒற்றையர் போட்டியில் தேசிய சேம்பியன் ஆனார். 1980களில் இந்தியாவின் மிகச்சிறந்த டேபிள் டென்னிஸ் வீரராக விளங்கினார்.

1990-ம் ஆண்டுக்கு ஓய்வு பிறகு கனடாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். கனடாவின் மாண்ட்ரியலில் மரணமடைந்த மன்மீத் சிங்குக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்