ஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Report Print Kavitha in ரெனிஸ்

கொரோனா வைரஸ் டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்த நிலையில் இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்கதாக காரணத்தால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் இதில் பங்கேற்ற கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா),

போர்னோ கோரிச் (குரோஷியா), விக்டர் டிரோக்கி (செர்பியா) ஆகிய வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஜோகோவிச்சின் பயிற்சியாளரான 48 வயதான கோரன் இவானிசெவிச் (குரோஷியா) புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

2001-ம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இவானிசெவிச் குரோஷியா சுற்று கண்காட்சி டென்னிஸ் போட்டியின் இயக்குனராக செயல்பட்டார்.

நேற்று தனது இன்ஸ்டாகிராம் பதிவிலே தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ எனக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. எனது உடல்நிலை நன்றாகவே இருக்கிறது.

கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட 2 மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா இல்லை என்று முடிவு வந்த நிலையில் தற்போது நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது.

இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நான் தொடர்ந்து சுய தனிமைப்படுத்துதலை கடைப்பிடிப்பேன். கொரோனா தொற்றுக்கு ஆளான அனைவரும் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு வர வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

instagram

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்