சர்வதேச டென்னிஸ் 5 மாதங்களுக்கு பிறகு இன்று தொடக்கம்

Report Print Kavitha in ரெனிஸ்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி தடைப்பட்டிருந்து.

இந்நிலையில் இன்று இத்தாலியில் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று முதல் 9-ந் திகதி வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச டென்னிஸ் தொடர் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் முதல் போட்டி ஆகும்.

குறித்த போட்டியில் பெட்ரா மார்டிச் (குரோஷியா), மரியா சக்காரி (கிரீஸ்), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கோன்டாவெய்ட் (எஸ்தோனியா), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மிலாடெனோவிச் (பிரான்ஸ்) உள்ளிட்ட வீராங் கனைகள் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்