டாப்சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி செரீனா வெற்றி

Report Print Kavitha in ரெனிஸ்
78Shares

கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியிருந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகள் மீண்டும் துவங்கியுள்ளது.

கென்டக்கியின் லெக்சிங்டனில் நடைபெற்றுவரும் டாப் சீட் ஓபன் டென்னிஸ் 2020 தொடரில் பங்கேற்று செரீனா வில்லியம்ஸ் விளையாடி வருகிறார்.

செரீனா வில்லியம்ஸ் 6 மாதங்களுக்கு பிறகு இந்த தொடரில் மிகவும் உற்சாகமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் செரீனா அமெரிக்க வீராங்கனை பெர்னார்டா பெராவை 4 -6, 6 -4 மற்றும் 6 -1 என்ற செட் கணக்குகளில் தோற்கடித்து வெற்றியை ஈட்டியுள்ளார்.

இதேவேளை தன்னுடைய மூத்த சகோதரி வீனஸ் வில்லியம் விக்டோரியா அசரெங்காவை 6 -3 மற்றும் 6 -2 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தியுள்ளதால் இரண்டாவது சுற்றில் செரீனா அவரை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்