அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஜோகோவிச் தகுதி நீக்கம்

Report Print Kavitha in ரெனிஸ்

நியூயார்க் நகரில் நடந்து வருகிற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நோவக் ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் மூன்று ரவுண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 போட்டியில் ஸ்பெயின் நாட்டின் பப்லோ கரெனோ புஸ்டாவுக்கு எதிராக விளையாடினார்.

இந்நிலையில் ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடியுள்ளார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது.

ஜோகோவிச் இதனால் ஆத்திரம் அடைந்து பந்தை தரையில் வேகமாக அடித்துள்ளார். அந்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டு அவருக்கு காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார்.

இருப்பினும் டென்னிஸ் விளையாட்டு விதியின்படி வீரரையோ, நடுவரையோ, அதிகாரிகளையோ விளையாடும் போது உடல் ரீதியாக தாக்கினால் சம்பந்தப்பட்ட வீரரை தொடரை விட்டே விலக்கலாம் என்ற விதியுள்ளது.

அதன்படி தற்போது ஜோகோவிச் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்