கொழும்பிற்கு வருகை தந்த உலகின் மிகப்பெரிய கப்பல்!

Report Print Vethu Vethu in போக்குவரத்து

உலகின் மிகப்பெரிய கொள்கலன் போக்குவரத்துக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

முதல் தெற்காசிய விஜயத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த கப்பல் கொழும்பிற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மிலான் மரகஸ் என்ற கப்பலே இவ்வாறு இலங்கை வந்துள்ளது.

இந்த வருடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கப்பலில் 212,000 டன் பொருட்களை ஏற்ற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

399 மீற்றர் நீளமும் 58 மீற்றர் அகலத்தையும் இந்த கப்பல் கொண்டுள்ளது.

மிலான் மர்கன் கப்பல் டென்மார் நாட்டின் கீழ் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்