பிரித்தானியாவில் இது சட்டப்படி குற்றமாகும்! கண்டிப்பாக பகிரவும்

Report Print Raju Raju in போக்குவரத்து

பிரிட்டன் அரசு சாலை போக்குவரத்து விடயத்தில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றி வருகிறது.

அதன்படி வாகனங்களை ஓட்டும் போது கைப்பேசியை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

இரு சக்கர வாகனம் மற்றும் சிறிய வாகனத்தை ஓட்டும் போது கைப்பேசி உபயோகப்படுத்தினால் குறைந்த பட்சம் £100லிருந்து அதிகபட்சம் £1,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

இதுவே பேருந்து போன்ற கனரக வாகனமாக இருந்தால் அதிகபட்சம் £2,500 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இரண்டு வருடத்துக்குள் ஆறு முறை பிடிப்பட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் வாகன ஓட்டுநர்கள் ஏதாவது அவசர உதவி தேவையென்றால் 999 மற்றும் 112 எண்களுக்கு மட்டும் போன் செய்யலாம்.

அதே போல வாகனத்தை சரியான இடத்தில் Parking செய்துவிட்டு போன் பேசலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ப்ளூடூத், ஹெட்போன்களை பயன்படுத்தலாம் என்றும், ஆனால் அது கவனச்சிதறலாக பொலிசார் கருதினால் அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments