சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு

Report Print Meenakshi in சுற்றுலா
374Shares
374Shares
ibctamil.com

கோவா இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடமாகும். அங்குபுதிதாக சுற்றுலா செல்பவர்கள் கவனத்துடன் இருப்பது அவசியம்.

வெளிநாட்டு பயணிகள் அதிகம் இருக்கும் கோவாவில் தேவையின்றி ஏற்படும் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். பிரச்சனைகளை தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை.

உள்ளூர் ஆட்டோ

கோவாவிற்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பதால் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 300 ரூபாய் வரை ஏமாற்றுவார்கள். எனவே ஆட்டோவில் ஏறும் முன்பு கட்டணத்தினை கேட்டுவிட்டு ஏறுவது நலம்.

அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்

கடற்கரையில் நீச்சல் உடையில் உள்ள வெளிநாட்டு பயணிகளை அவர்களின் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பதால் காவல்நிலையம் வரை பிரச்சனைகள் போகக்கூடும். இளைஞர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

தங்கும் இடம்

கோவாவில் சாதாரண ஹோட்டலில் வசதி குறைவாக ஆனால் கட்டணம் அதிகமாக தான் இருக்கும். நாம் கிளம்புவதற்கு முன்பாகவே நல்ல இடமாக பார்த்து முடிவு செய்து கொள்வது நல்லது.

அதிகம் குடிக்க வேண்டாம்

பெரும்பாலானவர்கள் கோவாவிற்கு செல்வதே குடிப்பதற்காக தான். ஊர் திரும்பும் வரை குடித்து கொண்டே இருந்தால் மற்ற இடங்களை சுற்றி பார்க்க இயலாது. எனவே குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

கடற்கரையில் தூங்க வேண்டாம்

கடற்கரையில் குளித்துவிட்டு இரவு நேரங்களில் அங்கேயே தூங்கிவிட்டால் நண்டுகளிடையே மாட்டி கொள்ள நேரிடும். மேலும் சமூக விரோதிகளால் ஆபத்துக்கள் நேரிடும் அபாயமுள்ளது.

சாகசங்களில் கவனம் தேவை

ஸ்கூபா டைவிங், பாரா செயிலிங், சர்பிங் போன்ற நீர் சாகச விளையாட்டிற்கு கோவா புகழ் பெற்ற இடமாகும். முறையான வழிகாட்டுதல் இன்றி இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

டாட்டூ

கோவாலில் புகழ் பெற்றது டாட்டூ. ஆனால் சிலர் டாட்டூ குத்துவதற்கு தரமற்ற மையினை பயன்படுத்துவதால் தோளுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும்.

டாட்டூக்களை குத்தி கொள்வதற்கு போலியான டாட்டூ பார்லர்களை தவிர்க்க வேண்டும்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments