எழில் கொஞ்சும் புளியஞ்சோலை மலை

Report Print Kabilan in சுற்றுலா

கொல்லிமலையைப்பற்றி கேள்விபட்டிருப்போம், ஆனால் அதன் அருகில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலைமலை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

திருச்சி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பிரதேசம் புளியஞ்சோலை.

இந்த மலையானது இயற்கையான சூழலில் பசுமையான குளுமையைக் கொண்டிருக்கிறது, சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் இடமாகவும் உள்ளது.

இதன் மலை உச்சி ஆகாய கங்கை என்று அழைக்கப்படுகிறது, இங்கு மிதமான சூழல் நிலவுவதால் சாகச பிரியர்களின் விருப்ப இடமாக உள்ளது.

இங்கு உருவாகும் அருவியின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்த அருவியை புளியஞ்சோலையிலிருந்து ஐந்து கி.மீ நடைபயணத்தின் மூலமே அடைய முடியும்.

மேலும் ஆகாய கங்கையில் சுமார் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறைகள், குகைகள் மற்றும் கோவில்கள் உள்ளன.

ஆனால் இவை எவ்வாறு உருவாகின என்பதற்க்கான சான்றுகள் ஏதும் இங்கு இல்லை.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers