இலங்கையில் வியக்கத்தகு சுற்றுலா தளங்கள்

Report Print Kavitha in சுற்றுலா

நான்கு பக்கமும் நீர் சூழ, மத்தியில் மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என ஒரு சுவர்க்கத்தையே எம் கண் முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் இலங்கைத் தீவு.

இயற்கை அரண்களைக் கொண்ட இலங்கைத் தீவு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்தவொரு இடமாக இன்றும் பிரதிபலிக்கின்றது.

நம் மனதை கவர்ந்ததும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இயற்கை இடங்களின் தொகுப்பு இதோ,

பேராதனை தாவரவியற் பூங்கா

பேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும்.

இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது.

ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது.

சிங்கராஜா வனம்

சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது.

சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும்.

இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு உள்ளாச்ப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும்.

மிகிந்தலை எச்சக்குன்று

இலங்கையில் உள்ள எச்சக்குன்றுகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் மண் உள்ளீர்க்கப்பட்டு, இத்தகைய எச்சக்குன்றுகள் உருவாகின்றன. மகிந்த தேரரின் வருகைக்குப் பின் இந்த எச்சக்குன்றுகள் புண்ணிய இடமாக மாற்றம் பெற்றன.

இதனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், புதை பொருட்கள் என்பன இங்கு காணப்படுகின்றன. இவை அனுராதபுரக் காலப்பகுதிக்கு உரியவையாகும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகிந்தலை ஒரு சரணாலயம் ஆகும். இது அநுராதபுரத்திலிருந்து 8 கிலோ மீற்றர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இதுவும் காணப்படுகின்றது.

ஹிக்கடுவை

ஹிக்கடுவை இலங்கையின் தென் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது தென் மாகாணத்தில், காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்நகரம் கடற்கரை, கடல் அலை மேல் சறுக்கி விளையாடுதல் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவற்றுக்கு சிறப்புப் பெற்றது. இலங்கைக்கு அதிக சுற்றுலா வருவாய் பெற்றுத்தரும் முக்கிய இடமாகவும் இது திகழ்கிறது.

ஹோட்டன் சமவெளி

ஹோட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது.

1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக காணப்பட்ட ஹட்டன் சமவெளி, 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும்.

இச்சமவெளி அயனமண்டல மலைக்காடுகளாலும் ஈரபத்தனைப் புல் நிலங்களாலும் ஆனாது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும். இது அதிகம் சுற்றுலா பயணிகளின் மனதைக் கவர்ந்த இடமாகும்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...