கின்னஸ் சாதனை படைத்த பசு: சுற்றுலாத் தளமாக மாறிய கிராமம்

Report Print Printha in சுற்றுலா

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அமைந்துள்ள அத்தோலி எனும் கிராமம் ஒரு பசுவினால் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

அத்தோலி எனும் கிராமத்தில் உள்ள மாணிக்கம் எனும் பசு ஆட்டுக்குட்டிய விட சிறிய உருவமாகக் காணப்படுவதால், அது கின்னஸில் சாதனை படைத்துள்ளது.

அதன் காரணமாக சிறிது காலத்திற்கு முன்னாடி வரைக்கும் இங்கு வாழ்பவர்களைத் தவிர யாருக்கும் அவ்வளவாக தெரியாத இந்த அத்தோலி ஊரை சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளது.

சுற்றுலா தளமாக மாறிய இந்த கிராமத்திற்கு கடந்த 6 வருடங்களாக உலகின் பல்வேறு இடங்களிலிருந்து இந்த ஊருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனராம்.

அதுக்கு முழுக்க முழுக்க மாணிக்கம் பசு தான் காரணம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.

ஏனெனில் ஆட்டுக் குட்டியை விட சிறிய உருவத்தை கொண்ட இந்த பசுவிற்கு 6 வயது ஆகிறது. பொதுவாகவே நன்கு வளர்ச்சி அடைந்த பசுவின் உயரம் 4.7-5 அடி வரை இருக்கும்.

ஆனால் மாணிக்கம் பசு 1.75 அடி தான் இருக்கிறது. சராசரி எடை என்பது பசுவில் சாதாரணமாக 313 கிலோ இருக்கும். ஆனால் இதன் எடை வெரும் 40 கிலோ மட்டும் தான் உள்ளது.

பொதுவான பசுவை விட இந்த மாணிக்கம் பசுவானது உயரத்தில் மூன்றில் ஒரு பங்கும், எடையில் எட்டில் ஒரு பங்குமே இருக்கிறது.

இதன் காரணமாக தான் இந்த மாணிக்கம் பசு உலக சாதனை படைத்துள்ளது. இந்த மாணிக்கத்தை தினமும் காரில் ஏற்றி மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றனர்.

அதனால் இப்பசுவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி, அதற்கு ரசிகர்களும் அதிகரித்துள்ளதாக அப்பசுவை வளர்த்த குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்