எதிரிகளிடமிருந்து தன்னை பாதுகாக்க கட்டிய அழகிய கோட்டை! வரலாற்றில் இடம் பிடித்தது எப்படி?

Report Print Kavitha in சுற்றுலா

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்ந்த முதன்மை சுற்றுலா இடங்களில் “சிகரியா குன்று” பிரபல்யம் வாய்ததாக கருதப்படுகின்றது.

இது இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது.

இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழியா புகழ்பெற்ற சித்திரங்கள் பல உள்ளன.

எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) அமைத்தான் என வரலாறு கூறுகின்றது.

இது சுமார் 1.5(15,000 square meters) பரப்பளவு கொண்ட இந்த பாறையின் உச்சத்தில் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட தடாகம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும் 21 மீட்டர் அகலமும் கொண்டது.


இக்குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது.

இலங்கைக்கு வருமானத்தினை ஈட்டி தருகின்ற மிக முக்கிய தொல்லியற் சுற்றுலா மையமாகவும் இது திகழ்கிறது.

யார் இந்த காசியப்பன்?

முதலாம் காசியப்பன் என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தில் இரண்டாம் மன்னனாவான்.

இவன் மௌரிய மன்னர்கள் வம்சத்தில் முதலாமனவனும் தன் தந்தையுமானவனான தாதுசேனன் என்பவனைச் சிறையில் அடைத்து கொன்றும் விட்டு அரசக்கட்டிலில் ஏறியவன் என வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான முதலாம் முகலன் (பொ.பி. 497 - 515) என்பவன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

srilankatravelandtourism

அவன் திரும்பி வந்து தன்னைத் தாக்கக் கூடும் என்றெண்ணிய காசியப்பன் சீககிரி என்னும் மலைக்கோட்டை அரண்மனையைக் கட்டி அங்கிருந்து அரசாண்டான்.

மேலும் இவனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் முகலன் தன் நண்பர்களான தமிழ்நாட்டு நிகந்தர்களை இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்தான்.

தான் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தவுடன் காசியப்பன் தன் வாளால் தன் தலையை வெட்டி தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகின்றது.

குகையின் தோற்றம்?
Google

இந்த பாறையின் உயரம் 200 மீற்றர் (660 அடிகள்) உடையது. இந்த பாறையின் தோற்றம் அதன் சமபாதியான உயரத்தில் ஒரு மடிப்பாக இயற்கையாகவே அமைந்துள்ளது.

அதனால், ஒரு சிங்கம் படுத்திருப்பது போன்ற தோற்றம் இருப்பதால் இந்த மலைக்கு சிங்க மலை என்ற பெயர் கிடைத்துள்ளது.

பாறையின் உச்சி அமைப்பு சமதள பரப்பும் ஒரு பக்கம் சாய்வும் கொண்டது. காடுகளை சுற்றி அடித்தளத்துடன் அரண்மனை வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

குகையின் அமைப்பு ?

  • படிக்கட்டுகள் மூலம் மலையின் நடுப்பகுதிக்கு போக முடியும். இதிலிருந்து மலையின் வடக்குப்பக்கத்திலுள்ள மேடைக்கு போக முடியும்.

  • இம் மேடையிலிலுந்து படிக்கட்டுகள் மண்ணினால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய சிங்கத்தின் கடைவாய்க்கு ஊடே உயர்ந்து செல்கின்றன.

  • சிங்கத்தின் வாய்க்குள் பார்வையாளர்கள் செல்வதற்கான வழி அமைக்கப்பட்டுள்ளது.

  • குன்றின் உச்சியில் அரண்மனை அத்திவாரத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன.

  • இது தேவ அரசர்களின் அரண்மனைக்குச் சொல்லப்பட்ட விதிகள் அடங்கிய அமைப்பையும் கொண்டுள்ளது.

  • இயற்கையான மூன்று ஊற்றுகள், பூங்கா, மன்னன் மகாராணி குளிக்கும் தொட்டி போன்றவை இன்றும் சிதைவுகளுடன் காணப்படுகிறன.

  • மேற்குப்புற பாறைச்சுவரில் சிகிரியா ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

  • குன்றின் கிழக்கும் மேற்கும் மதில்களாலும் அகழிகளாலும் அரண் செய்யப்பட்டிருக்கின்றன.

  • மதிலின் சில பகுதிகள் இன்றும் அழியாமல் இருக்கின்றன. இம் மதிலின் சில பகுதிகள் 30 அடி உயரமுடையன. அகழி 14 அடி ஆழமும் 82 அடி அகலமும் கொண்டது.

  • கீழே சிங்கத்தின் கால்களாக இரண்டு பெரிய பாறைகற்கள் செதுக்கப்பட்டுள்ளது. அதன் விரல்கள், நகங்கள் அற்புத வடிவமைப்பு.

ஓவியங்களின் சிறப்பு

உலகிலேயே பெரிய ஓவியங்கள் இதுவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த ஓவியங்களில், திறந்த மார்பகங்களுடன் உள்ள 21 பெண்கள், இலங்கையில் 5ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பெண்களின் தோற்றம், உடைகள், ஆபரணங்கள், அவர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக தத்ரூபமாக உள்ளது.

சிகிரியாவில் மொத்தம் 27 ஓவியங்கள் ஆரம்பத்தில் காணப்பட்டன. தற்போது ஏழு ஓவியங்கள் மாத்திரம் காணப்படுகின்றன.

ஓவியங்கள் அனைத்தும் காசியப்பன் மன்னனாலேயே வரையப்பட்டுள்ளது.

மேலும் சுண்ணாம்பு, தேன், கபுக்கல் போன்றவற்றைக் கலந்து பாறையில் பூசிய தளத்திலேயே (ஈரம் காய்வதற்கு முன்) ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் ஈரச் சுதை ஓவிய வகைக்குள் உள்ளடக்கப்படுகிறன.

ஓவியங்களுக்கு இயற்கையான வர்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது மரத்திலிருந்து கிடைக்கப்படும் பசைவகை (மரத்திலிருந்து பசை வடியும் போது ஒரு நிறமாகவும் சற்று நேரம் செல்ல வேறு நிறமாகவும் சில நாட்கள் கழிய கறுப்பு நிறமாகவும் மாறும் தன்மை கொண்டது. இந்த நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.), பரப்பட்டைச் சாயம் என்பனவாகும்.

கண்ணாடிச்சுவர் தேன், கபுக்கல் கொண்டு ஓவியம் வரைவதற்கு தயார் செய்யப்பட்ட பகுதியாகும் இது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் ஓவியங்கள் வரையப்படவில்லை.

சிகிரியா ஓவியத்தில் பெண்களின் சித்தரிப்பு?
Google

  • முகத்தில் பக்தி பரவசம், கைகளில் அல்லி மலர், தட்டுகைகள் ஏந்துகை என்பவற்றைக் கொண்டு சில வரலாற்றாசிரியர்கள் இவர்களை புத்தரை தரிசிக்கப் போகும் பெண்களாக விபரிக்க, சிலரோ இப் பெண்களை அங்கப்பாத்து மகளிர் என வர்ணிக்கின்றனர்.

  • இப்பெண்ணோவியங்கள் சில மேலாடையுடனும், சில மேலாடையின்றியும், சில கூட்டங்களாகவும் சில தனித்திருப்பவர்களாகவும் வரையப்பட்டுள்ளன.

  • இவ்வோவியங்களின் முகவமைப்பு, இடையமைப்பு என்பவற்றின் தோற்றுகை அஜந்தா ஓவியத்தின் சாயலாகவும், பல்லவர் கால சித்தான வாசல் ஓவியங்களின் சாயல்களாகவும் உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு அமைப்பினால் (யுனெஸ்கோ) கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் தெரிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய இடமாக 1982 இல் சீயகிரி என்ற சிகிரியா அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...