தேனிலவை வித்தியாசமாக கொண்டாடிய புதுமணம் தம்பதி! என்ன செய்தனர் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

Report Print Santhan in சுற்றுலா

இந்தியாவில் திருமணம் செய்து தேனிலவு கொண்டாட வந்த தம்பதியினர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அனுதிப் மற்றும் மனுஷா ஜோடி கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட பிந்தூர் சோமேஸ்வரா கடற்கரைக்கு சென்று, அங்கிருந்த குப்பைகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.

இருவரும் சேர்ந்து, மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நிரூபித்துள்ளனர். இவர்கள் சோமேஸ்வரா கடற்கரையில் தேங்கி இருந்த பிளாட்டிக் பாட்டில்கள், செருப்புகள், உணவு குப்பைகள், காகிதக் குப்பைகள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.

தேனிலவை கொண்டாடும் முன், அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பியதாக இந்த இளம் தம்பதியினர் கூறி இருக்கின்றனர்.

31 வயதான அனுதிப், டிஜிட்டல் மார்க்கெட்டர் ஆவார். இவர் இது குறித்து கூறுகையில், நான் பிறந்து வளர்ந்த இடம் இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது வருத்தம் அளித்தது.

தேனிலவுக்கு சர்வதேச சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்த அனுதிப், கொரோனா காரணத்தால் அதை தவிர்த்துவிட்டார்.

திருமணம் முடிந்த மறுநாளே, 6 ஆண்டுகள் காதலித்த வந்த இந்த ஜோடி, சோமேஷ்வரா கடற்கரையை சுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

இதற்கு முன்பே அனுதிப் இப்படியான சுத்தம் செய்யும் பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வுகளில் ஈடுபட்டுள்ளார். தனது மனைவியிடம் ஒப்புதல் கேட்ட போது, அவர் உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் குடும்பத்தினர் வேடிக்கையாக பார்த்ததாகவும், புதுமண பெண்ணை குப்பை அள்ள வைப்பதை கண்டு அனுதிப்பின் அப்பா வருத்தப்பட்டுள்ளார். பின்னர், தங்களது எண்ணம் குறித்து அவர் புரிந்துக் கொண்டதாக அனுதிப் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வின் போது தங்களுடன் சேர்ந்து பலரும் சுத்தம் செய்தனர். அது மகிழ்ச்சியாக இருந்தது, மொத்தம் 800 கிலோ எடை கொண்ட குப்பைகள் நாங்கள் அகற்றி இருந்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்