பிரித்தானிய பவுண்டுக்கு எதிராக யூரோ பாரிய வீழ்ச்சி

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் தீர்மானம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரோக்கியமான நிலையை எட்டியுள்ளது.

இதன் காரணமாக பவுண்டின் பெறுமதி வலுவடைந்து செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் பிரித்தானிய பவுண்டின் வளர்ச்சி தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னதாக யூரோவிற்கு எதிராக பவுண்டு மிக உயர்ந்த மதிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 8 மணி அளவில் பவுண்டிற்கு எதிராக யூரோ 1.254 வீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த வாரத்துடன் இந்த மதிப்பீட்டை ஒப்பிடும் போது இது 0.4 சதவீத உயர்வாக கருதப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் பவுண்ட் பெறுமதியை அதிகரித்து கொள்வதற்கு பிரித்தானியா நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பிரெக்ஸிட் விவகாரத்தினால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் அச்சத்தைத் தளர்த்துவதே இதன் நோக்கம் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்