பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு துவிச்சக்கர வண்டி பேரணி

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
206Shares
206Shares
ibctamil.com

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாரிய இன அழிப்பை பிற இன மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மே 12ஆம் திகதி தொடக்கம் 18ம் திகதி வரை தமிழ் மக்களால் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் சுழற்சி முறையிலான மாபெரும் துவிச்சக்கர வண்டி கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்று வருகின்றது.

மே 12ம் திகதி பிரித்தானியா பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக மதியம் 12 மணிளவில் ஆரம்பமாகிய இந்த பேரணி ஈஸ்ட்காம் (EASTHAM) எனும் இடத்தில் பி.ப 5.30 மணியளவில் முதல் நாள் துவிச்ணக்கர வண்டி பயணம் முடிவடைந்தது.

குறித்த கவனயீர்ப்பு பேரணியில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பேரணி சென்ற பாதையில் அமைந்துள்ள இரத்ததான மையத்தில் சில இளைஞர்கள் இரத்ததான வழங்கலையும் மேற்கொண்டிருந்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்