பொலிஸ் அதிகாரியை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டையில் வீசிய நபர் கைது

Report Print Peterson Peterson in பிரித்தானியா
பொலிஸ் அதிகாரியை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டையில் வீசிய நபர் கைது

பிரித்தானிய நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரை கொடூரமாக கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தெற்கு லண்டன் நகரை சேர்ந்த Gordon Semple(59) என்பவர் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவர்.

இதே பகுதியில் இத்தாலி நாட்டை சேர்ந்த StefanoBrizzi(49) என்ற நபர் சமூக ஆர்வலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 முதல் 7ம் திகதிக்குள் இவ்விருவரும் சமூக வலைத்தளம் மூலமாக சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம், ஏப்ரல் 1ம் திகதி முதல் பொலிஸ் அதிகாரி வீட்டிற்கு திரும்பவில்லை என புகாரும் பதிவு செய்யப்பட்டது.

பொலிசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், இத்தாலி நாட்டை சேர்ந்த நபரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குப்பை தொட்டியில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வந்ததால் பொலிசார் அதனை சோதனை செய்துள்ளனர்.

குப்பை தொட்டிக்கு உள்ள காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட பொலிஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டுள்ளதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

உடல் உறுப்புகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பொலிசார், இந்த கொலைக்கு பின்னணியில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் அந்த இத்தாலி நபரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

மேலும், அந்த நபர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அக்டோபர் மாதத்தில் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments