பிரித்தானியாவில் கோலாகலமாக நடைபெற்ற தம்பலகாமம் கோவில் நிதி திரட்டும் கலை விழா

Report Print Fathima Fathima in பிரித்தானியா
பிரித்தானியாவில் கோலாகலமாக நடைபெற்ற தம்பலகாமம் கோவில் நிதி திரட்டும் கலை விழா

ஈழத்தில் கிழக்கே அமைந்த பாடல் பெற்ற திருகோணஸ்வர ஆலயம் அமைந்துள்ள திருகோணமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விவசாய பூமி தம்பலகாமம்.

அங்கே பட்டிமேடு என்னும் இடத்தில் கடந்த250 வருடங்களாக அருள் பாலித்து வரும் சிந்தாமணி பிள்ளையார் ஆலய புனருத்தான வேலைகளுக்கும் மற்றும் அதையொட்டிய சிறிய நூலகம் ஒன்றை மீள்திருத்தும் பணிகளுக்கு நிதி உதவி திரட்டும் முகமாக கடந்த சனிக்கிழமை 28ம் திகதி வைகாசி மாதத்தில் ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சியை பிரித்தானியாவில் வாழும் அன்பர்கள் அடியார்கள் Northolt, Shree Kutch Leva அரங்கினில் ஒழுங்கு செய்திருந்தனர்.

A1- London Tamil Karaoke, பாலா ரவி குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், திடீர் நாடக மன்றம் மற்றும் சதீஸ் குழுவினரின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெற்றன.

நிகழ்ச்சிகளின் பதிவுகளை JayLux நிறுவனத்தின் உரிமையாளர் Baba Luxi மிக தத்ரூபமான புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments