Serendip சிறுவர்கள் காப்பகத்தின் நிதி திரட்டும் நிகழ்வு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
Serendip சிறுவர்கள் காப்பகத்தின் நிதி திரட்டும் நிகழ்வு

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் விதவைகளுக்கு உதவும் பொருட்டு Serendip சிறுவர்கள் காப்பகம் பிரித்தானியாவில் நிதி திரட்டும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Serendip சிறுவர்கள் காப்பகமானது கடந்த 2009ம் ஆண்டு முதற்கொண்டு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், விதவைகளுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்டும் நிகழ்வு ஒன்றை பிரித்தானியாவில் ஜூன் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.

பகல் 12 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுக்கிறது இந்த தொண்டு நிறுவனம்.

நிகழ்வில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ள இந்த நிறுவனம், உணவு மற்றும் கூடுகையுடன் ஞாயிறு மாலையை இனிதே செலவிட இது ஒரு வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்டுள்ளது.

Serendip சிறுவர்கள் காப்பகமானது 200 சிறுவர்களுக்கு தேவை அறிந்து மாதந்தோறும் நிதி உதவி அளித்து வருகிறது.

மட்டுமின்றி 800 ஆதரவற்ற சிறுவர்களுக்கு தொடர்ச்சியாக நிதி உதவி அளித்து வருகிறது. மட்டுமின்றி போதிய நிதி வசதி அற்ற 25 மாணாக்கர்களுக்கு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தங்கள் கல்வியை தொடரும் வகையில் உதவி வருகிறது.

மேலும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கும் தேவையான நிதி வசதிகளை செய்து வருகிறது. மட்டுமின்றி மலேசிய தமிழர்களுக்கும் இந்த தொண்டு நிறுவனம் தேவையான உதவிகளை செயல்படுத்தி வருகின்றது.

குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாகாணங்களில் உள்ள மிகவும் திறமையான கடின உழைப்பாளியான 50 அனாதை சிறுவர்களுக்கு நிதி உதவி அளித்து வருகின்றது Serendip சிறுவர்கள் காப்பகம்.

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments