பிரித்தானியா விலகி செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்த 50,000 பேர்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
பிரித்தானியா விலகி செல்லக்கூடாது: நாடாளுமன்றத்தை நோக்கி படையெடுத்த 50,000 பேர்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிச்செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50,000 பேர் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஐரோப்பிய யூனியில் இருந்து பிரித்தானிய விலகிச்செல்ல வேண்டுமா? அல்லது நீடிக்க வேண்டுமா? என்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு கடந்த யூன் 23 ஆம் திகதி நடைபெற்றது.

பொதுவாக்கெடுப்பில் ‘விலக வேண்டும்’ என 52 சதவிகித மக்களும் ‘நீடிக்க வேண்டும்’ என 48 சதவிகித மக்களும் வாக்களித்தனர்.

இந்நிலையில், இந்த வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் குவிந்தன.

இதற்கிடையில், சுமார் 50,000 பேர் நீலம் மற்றும் தங்க நிறத்திலான ஆடைகளை அணிந்துகொண்டு, கைகளில் பல்வேறு பதாகைகளை ஏந்தியபடி நாடாளுமன்றத்தில் நோக்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பாவின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் இவர்கள் இந்த ஆடையை அணிந்துள்ளனர், மேலும் இசைவாத்தியங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இவர்கள் கையில் ஏந்தி சென்ற பதாகையில், "நாங்கள் ஐரோப்பிய யூனியன் மீது அன்பு செலுத்துகிறோம், பிரித்தானியா விலகி செல்லக்கூடாது".

மேலும், நம் நாடு ஐரோப்பிய யூனியனை விட்டு விலகிச்செல்வதை விரும்பவில்லை, ஆனால், தற்போது நடந்த வாக்கெடுப்பினை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், ஐரோப்பிய யூனியன் சார்ந்தவைகளை உள்ளடக்கியவைகளாக பிரித்தானியா இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பிரபல பாடகர் Bob Geldof, எம்பி Tim Farron, கட்டுரையாளர் Owen Jones ஆகியோர் கலந்துகொண்டனர்.

எங்கள் தலைமுறையினர் எங்களை பார்த்து, நாங்கள் உங்களை பார்த்து வெட்கப்படுகிறோம் என கூறும் அளவுக்கு வாக்கெடுப்பு நடந்துள்ளது, பிரித்தானியா விலகிசென்றால், இளம் தலைமுறையினரின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் தற்போது நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு சரியான புரிதல் இன்றி நடந்துள்ளது என கூறியுள்ளார்.

காலையில் இந்த போராட்டத்தை தொடங்கியவர்கள், நண்பகல் வேளையில் பிரித்தானியா நாடாளுமன்றத்தை சென்றடைந்தார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments