பிரித்தானியாவின் முடிவு சுவிஸ் அறிவியலுக்கு ஆபத்து: நிபுணர்கள் எச்சரிக்கை

Report Print Basu in பிரித்தானியா

சுவிட்சர்லாந்தின் எதிர்கால அறிவியல் ஆராய்ச்சி ஆபத்தில் இருப்பதாகவும், பிரித்தானியா வெளியேறுவதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரச்சனையை சுவிட்சர்லாந்து தீர்க்க வேண்டும் எனவும் நாட்டின் முன்னனி பொருளாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து the rector of Geneva University, Yves Flückiger அளித்த பேட்டியில் கூறியதாவது, சுவிட்சர்லாந்து அடுத்த பிப்ரவரி காலக்கெடுவிற்கு முன் அதன் குடியேற்றம் கேள்விக்கு ஒரு தீர்வு காண முடியாதுபற்றி நான் கவலைப்பட்டுகிறேன்.

ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் முதலில் பிரித்தானியாவை சாமாளிக்க வேண்டும்.

ஐரோப்பா, சுவிட்சர்லாந்திற்கு சாதகமான ஒப்பந்தம் செய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக நான் நினைக்கிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும். சுவிட்சர்லாந்திற்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றால், பல முக்கிய ஐரோப்பிய ஆராய்ச்சி திட்டங்களில் இருந்து சுவிஸ் விஞ்ஞானிகள் நீக்கப்படும் ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இதன் விளைவாக சுவிஸ் தலைமையில் நடந்து வரும் ஆராய்ச்சிகள் தடைபடும் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments