ஊனமுற்ற நபரின் மனக்கவலை: பேஸ்புக்கில் வைரலான வீடியோ

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
ஊனமுற்ற நபரின் மனக்கவலை: பேஸ்புக்கில் வைரலான வீடியோ

இங்கிலாந்தில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது பயணத்தின்போது உடல் ரீதியாக எதிர்கொண்ட பிரச்சனையை பேஸ்புக் பக்கத்தில் மன கவலையுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த Christopher Browne (21) என்ற நபர், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

பணிக்கு செல்வதற்காக அன்றாடம் பேருந்தில் பயணம் செய்யும் இவர், பேருந்தில் ஏற முற்படுகையில் ஓட்டுநர்களால் உதாசினப்படுத்தப்பட்டுள்ளார், அதாவது பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் Ramp என்ற நடைமேடையை பயன்படுத்தியே இவர் பேருந்தில் ஏற முடியும்,

ஆனால், ஓட்டுநர்களே காலதாமதத்தினை கருத்தில் கொண்டு, இவரை பேருந்தில் ஏற்றுவதை நிராகரித்துவிடுகிறன்றனர், ஒரு ஓட்டுநரோ பேருந்து படிக்கு அருகில் வந்து ஏறிக்கொள்ளுங்கள், உங்கள் சக்கர நாற்காலியை உள்ளே எடுத்து நாங்கள் போட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.

இதனால், மன வேதனை அடைந்த இந்நபர், என்னைப்போன்று இருக்கும் ஊனமுற்ற நபர்களாவது இதனை பொறுத்துக்கொள்வார்கள், ஆனால் இரண்டு கால்களையும் இழந்த நபர்களால் இது எப்படி சாத்தியமாகும்.

பேருந்து ஓட்டுநர்களின் மனிதாபிமானமற்ற செயல் எங்களை போன்ற ஊனமுற்ற நபர்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது என மன வருத்ததோடு பேசிய வீடியோவை தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவரது, இந்த செய்திக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர், குறிப்பாக பிற ஊனமுற்றவர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர், இந்த வீடியோ

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளி சமூக வளைதளத்தில் அனுப்பிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments