தீவிரவாதத்தை விரைவில் ருசிப்பீர்கள்! லண்டனுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐஎஸ்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரான்சின் நடத்தப்பட்ட நைஸ் நகர தாக்குதல் போன்றே லண்டனிலும் விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும்படியான வீடியோவை ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

பிரான்சின் நைஸ் நகரில் கடந்த 14ம் திகதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது லொறி செலுத்தி தாக்குதல் நடத்தியதில் 84 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்நிலையில் இதை போன்றே லண்டனிலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கும் விதமாக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் தோன்றும் தீவிரவாதி ஒருவன், பிராங்கோயிஸ் ஹோலண்டேவுக்கு கொடுக்கப்பட்ட பரிசு இதுதான் என்று கூறுகிறார்.

கமெரூன் புகைப்படம் தோன்றியவுடன், உங்கள் நாடும் விரைவில் தீவிரவாதத்தை ருசிக்கும் என எச்சரிக்கும் விதமாக முடிகிறது.Covent Garden மற்றும் Trafalgar Square –ல் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments