ஐரோப்பிய நாட்டவர்களை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?

Report Print Nivetha in பிரித்தானியா

பிரித்தானியாவில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவினால் பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கோ அல்லது ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரித்தானிய நாட்டவர்களுக்கோ அவர்களின் உரிமைகள் மற்றும் வதிவிட நிலைமைகளில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சட்டபிரிவு 50 தொடர்பான பொறிமுறையினை உருவாக்குதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முறைப்படியான செயன்முறையினை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் புதிய பிரதம மந்திரியினால் எடுக்கப்படும்.

இந்த செயன்முறைக்காலத்துள், சட்ட பிரிவு 50 தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுறும் வரையில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கத்துவ நாடாக தொடர்ந்து இருக்கும்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும்போது, பிரித்தானியாவில் வதியும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாட்டவர் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் வதியும் பிரித்தானியர்களின் சட்டப்படியான வதிவிட உரிமை சரியான முறையில் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் முழுவதுமாக நம்புகின்றோம்.

தொழில் புரியும் , கல்வி கற்கும் மற்றும் பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியர் அல்லாத மக்களினால் வழங்கப்பட்ட முக்கிய பங்களிப்பினை அரசாங்கம் அங்கீகரித்து மதிப்பளிக்கின்றது.

நான் பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துள்ளேன். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுதல் என்ற முடிவு என்னை எந்த விதத்தில் பாதிக்கும்?

தொடர்ச்சியாகவும் சட்ட பூர்வமாகவும் பிரித்தானியாவில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் பிரித்தானியாவில் வசிப்பதற்கான நிரந்தர வதி உரிமையை பெற்றுக்கொள்ள (Permanent Residence-PR) இயல்பாகவே தகுதி பெறுகின்றனர்.

இதன் கருத்து என்னவெனில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் பிரகாரம் இவர்கள் பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உரித்துடையவர்களாகின்றனர். இந்த வதிவிட உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஆவணப்படுத்துவதற்கான பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்ற எந்த தேவைப்பாடுகளும் இல்லை.

தொடர்ச்சியாகவும் சட்ட பூர்வமாகவும் பிரித்தானியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் தாம் விரும்பினால் பிரித்தானிய குடியுரிமை (Citizenship) பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்களாவர். பிரித்தானிய குடியுரிமை பெறுவதற்கான தகுதித் தேவைப்பாடுகளை UK Visas and Immigration இன் இணையதளத்தில் பார்வையிடலாம்.

நான் பிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக வசித்திருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுதல் என்ற முடிவு என்னை எந்த விதத்தில் பாதிக்கும்?

ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் தொடர்ந்து பிரித்தானியாவில் வசிப்பதற்கு உரித்துடையவர்களாவர்.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள், தங்களின் நாடுகளுக்கிடையில் இயல்பாக நகரும் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை அனுபவிப்பதற்காக ஆவணப்படுத்துவதற்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

எவராவது பதிவுச் சான்றிதழினை பெற்றுக்கொள்ள எண்ணினால் இது விடயம் தொடர்பாக அரசாங்க கொள்கை அல்லது செயல்முறைகளில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. விண்ணப்பங்கள் தொடர்ச்சியாக வழக்கம் போல பரிசீலிக்கப்படும்.

ஐரோப்பிய நாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஐரோப்பிய நாட்டவரல்லாதவர்களாக இருந்தால் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் பிரகாரம் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு, அவர்களிடம் அங்கத்துவ நாட்டினால் வழங்கப்பட்ட வதிவிட அட்டை இல்லாதவிடத்து அவர்கள் குடும்ப அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ள கட்டாயமாக விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை தொடர்ந்து காணப்படுகின்றது.

இது விடயம் தொடர்பாக அரசாங்க கொள்கை அல்லது செயல்முறைகளில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. விண்ணப்பங்கள் தொடர்ச்சியாக வழக்கம் போல பரிசீலிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்களின் விரிவாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் (உறவினர்கள்) பிரித்தானியாவில் வசிக்க விரும்பினால் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்களாக இருக்குமிடத்து பிரித்தானிய வதிவிட பதிவுச் சான்றிதழிற்கும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டவரல்லாதவர்களாக இருக்குமிடத்து பிரித்தானிய வதிவிட அட்டைக்கும் விண்ணப்பிப்பது தொடர்ந்து கட்டாயமாகும்.

இது விடயம் தொடர்பாக அரசாங்க கொள்கை அல்லது செயல்முறைகளில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. விண்ணப்பங்கள் தொடர்ச்சியாக வழக்கம் போல பரிசீலிக்கப்படும்.

பிரித்தானியாவில்வதியும் அயர்லாந்து நாட்டவர்கள் பல்வேறு சட்ட கூறுகளின் கீழ் அனுமதியளிக்கப்பட்டுள்ளதன்படி தனியான உரிமைகளை அனுபவிப்பதுடன் அதிகப்படியான சந்தர்ப்பங்களில் பிரித்தானிய நாட்டவர்கள் போன்று கருதப்படுவார்கள். இந்த முடிவில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.

குரோஷியா (Croatia) ஐரோப்பிய ஒன்றியத்துடன் 2013 இல் இணைந்த பொழுது இடைமாறுதல் ஏற்பாடுகளின் கீழ் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதன்படி குரோஷிய நாட்டவர்கள் பிரித்தானியாவில் தொழில் புரிவதற்கு பதிவுச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது தொடர்ந்து கட்டாயமாக இருக்கும். இவர்களுக்கு தேவையான பதிவுச் சான்றிதழின் வகையானது அவர்கள் பிரித்தானியாவில் தொழில் புரிவதற்கான அனுமதியின் தேவைப்பாடு மற்றும் அவர்கள் பிரித்தானியாவில் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதில் தங்கியிருக்கும். இது விடயம் தொடர்பாக அரசாங்க கொள்கை அல்லது செயல்முறைகளில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.

விண்ணப்பங்கள் தொடர்ச்சியாக வழக்கம் போல பரிசீலிக்கப்படும்.

ஐரோப்பிய நாட்டவர்களை பிரித்தானியாவில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?

ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்கள் பிரித்தானியாவில் வசிப்பதற்கான உரிமையில் எந்த மாற்றமும் இல்லையாதலால் எவராவது பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்டால் அவர்களின் நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது.

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முன்னர் ஐரோப்பிய நாட்டவர் ஒருவர் உண்மையற்றவராக கருதப்படுமிடத்து, பொது மக்களிற்கு பாரதூரமான அச்சுறுத்தலினை ஏற்படுத்துபவராக இருக்குமிடத்து, சட்ட்டபூர்வமாக வசிக்காதவிடத்து அல்லது இயல்பான நாடுகளுக்கிடையிலான நகரும் உரிமையை தவறாக பயன்படுத்தியிருக்குமிடத்து மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவர்.

இவை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு David Thayaparan- 0208 540 8888.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments