ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய பிரித்தானியா: அதிகரித்த வன்முறை சம்பவங்கள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
637Shares
637Shares
lankasrimarket.com

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகிய பின்னர் ரயில்வே நிலையங்களில் பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா போக்குவரத்து துறை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளியல் அறிக்கையில், பிரித்தானியாவில் உள்ள ரயில் நிலையங்களில் மொத்தம் 119 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.

அதுவும் இந்த சம்பவங்கள் கடந்த யூன் 23 ஆம் திகதி முதல் யூலை 7 ஆம் திகதி வரையிலான காலத்திலேயே அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு 8 வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுவது உறுதியான பின்னரே, இனவெறுப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு 78 சதவீதமாக இருந்த இந்த வன்முறை சம்பவங்கள், இந்த ஆண்டு 80 சதவீதமாக அதிகரித்துள்ளது,

இதுகுறித்து Railfuture (பயணிகளுக்கு உதவும் தன்னார்வ குழுவினர்) பிரசார குழுவின் தலைவர் Bruce Williamson கூறியதாவது, ரயில் நிலையத்திற்குள் ஒவ்வொரு பயணிகளும், எவ்வித அச்சுறுத்தலும் இன்றி நுழைய வேண்டும் என்று தான் விரும்புகிறோம்.

Getty Images

ஆனால் தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் வேதனையை ஏற்படுத்துகிறது. எனவே பயணிகளை பாதுகாக்கும் பொருட்டு அதிகாரிகள் அமர்த்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், பிரித்தானிய போக்குவரத்து துறையின் மேற்பார்வையாளர் Chris Horton கூறியதாவது, வன்முறை சம்பவங்கள் நடப்பதை ஒதுபோதும் அனுமதிக்க முடியாது.

வன்முறை சம்பவங்களை தடுப்பதில் நாங்கள் எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம், மேலும் இதில் எங்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் தேவைப்படுகிறது.

வன்முறை சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க அவர்கள் முன்வரவேண்டும், அவர்கள் அளிக்கும் புகார் மீதான நடவடிக்கையில் நாங்கள் விரைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments