பிரித்தானிய தரைப்படையின் முதல் திருநங்கை சிப்பாய்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
289Shares

பிரித்தானியா தரைப்படையில் முதல் முறையாக திருநங்கை சிப்பாய் ஒருவர் இணைந்து வரலாறு படைக்க முயற்சி செய்து வருகிறார்.

ஆணாக பிறந்த Chloe Allen என்பவர், தனக்கு 8 வயது இருக்கையில் தனது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை உணர ஆரம்பித்துள்ளார்.

மேலும், தான் ஒரு ஆண் என்றபோதிலும், தனது தாயின் ஆடைகளை எடுத்து அணிவதில் இவருக்கு அதிக பிரியம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்துவந்த இவரின் வாழ்க்கை முறைக்கு, இவரது வீட்டிலும் அதிக ஆதரவு கிடைத்தது, இவரது பெற்றோர் இவனை ஒதுக்கி வைக்கவில்லை.

அதன்பிறகு பாலியல் மாற்றம் சிகிச்சை செய்துகொண்ட இவர், பிரித்தானிய தரைப்படையில் 4 வருடங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார், அங்கு இவரது பெயர் Ben ஆகும். பாலியல் மாற்றம் சிகிச்சை செய்துகொண்டாலும் சக வீரர்களுடன் பணியாற்றுவதில் இவரது மனதில் ஒருவித தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இவரது உயரதிகாரிகள் கொடுத்த உத்வேகத்தால், மனம் தளராது தரைப்படையில் பணியாற்றி வந்துள்ளார், மேலும் தான் ஒரு பொய்யான வாழ்க்கை வாழவில்லை என்பதை தனக்குள் உறுதிப்படுத்திக்கொண்ட இவர் தனது வாழ்க்கை குறித்து கூறியதாவது, எனது வீட்டினர் என்னை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.

என்னைப்போன்று அனைத்து திருநங்கைகளும் எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இன்றி வெளிஉலகத்துக்கு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.

முதலில் தங்களை தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும், பிரித்தானிய தரைப்படையில் இணைந்த பின்னர், கடந்த ஆண்டு யூலை மாதம் பிரதமர் கமெரூனை சந்தித்த பின்னர் தான் எனக்கான முழு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

தரைப்படையின் இராணுவ அதிகாரி Hannah Winterbourn கூறியதாவது, இராணுவ துறையில் முன்னோக்கு சிந்தனையும் செயல்படும் இவர், திறமையான வீரர் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments