பிரித்தானிய தூதுவரின் இந்த முடிவுக்கு யார் காரணம்!

Report Print Jubilee Jubilee in பிரித்தானியா
496Shares

சவுதி அரேபியாவின் பிரித்தானிய தூதுவர் முஸ்லீமாக மாறியுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

சவுதி அரேபியாவின் பிரித்தானிய தூதுவரான Simon Collis கடந்த 2011ம் ஆண்டு அவருடையை திருமணத்திற்கு முன் முஸ்லீமாக மாறியுள்ளார். அதன் பின்னர் ஹஜ் புனித யாத்திரையையும் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சவுதி அரேபிய எழுத்தாளர் Fawziah Albakr என்பவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, முதல் பிரித்தானிய தூதுவர் ஹஜ் புனித யாத்திரையை பயணத்தை மேற்கொண்டுள்ளார். Simon Collis மற்றும் அவரது மனைவி Huda மெக்காவில் உள்ளனர். அவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டார்.

இந்நிலையில் Simon Collis அரபியில் போட்ட டுவிட்டில், முஸ்லீம் கலாச்சாரத்தில் 30 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு தான் முஸ்லீமாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.

மதம் மாறிய Simon Collis மற்றும் அவரது மனைவிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments