காதலுக்கு எதுவுமே தடையில்லை! சாதனை தம்பதிகளின் சுவாரசியமான கதை

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரிட்டனில் உள்ள சுந்தர்லேன்ட் நகரை சேர்ந்தவர்கள் நாதன் பிலிப்ஸ் (37) லாரா வொயிட் (26).

இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதில் ஆச்சரியமான விடயமே நாதன் 3 அடி 11 அங்குலமும், லாரா 4 அடி 2 அங்குலமும் கொண்ட குள்ள மனிதர்கள் என்பது தான்.

இவர்கள் குழந்தை பெற்ற பின்னர் தான் திருமணமே செய்துள்ளனர். இதை பற்றி லாரா வொயிட் கூறுகையில், நான் ஹாரி பாட்டர் போன்ற பிரபல படங்களில் நடித்துள்ளேன்.

ஸ்னோ வொயிட் என்னும் படத்தில் நான் நடிக்கும் போது என்னுடன் சேர்ந்து நாதனும் நடித்தார், அப்போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது.

திருமணம் செய்யும் முன்பே நான் கருவுற்றேன். உறவினர்களும், மருத்துவர்களும் குழந்தை நிச்சயம் ஆரோக்கியமாக பிறக்காது என்று என் கருவை கலைக்க சொன்னார்கள்.

நான் மறுத்து விட்டேன். பின்னர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன் என கூறியுள்ளார். இந்நிலையில் பிறந்த குழந்தை ஊனத்துடனே அவர்களுக்கு பிறந்துள்ளது.

மருத்துவர்கள் அந்த குழந்தை சில வாரங்களுக்கு மட்டுமே உயிருடன் இருக்கும் என கூற அந்த குள்ள தம்பதிகள் இருக்கும் வரை அதை நன்றாக பார்த்து கொள்வோம் என கூறினார்கள்.

ஆனால் ஆச்சரியமாக குழந்தைக்கு சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது இரண்டரை வயது ஆகும் அந்த குழந்தை நன்றாகவே இருக்கிறது.

இதனையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நாதனும், லாரவும் தங்கள் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் 50 பேர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்துக்காக மாற்றிய மோதிரத்தை அவர்கள் இரண்டரை வயது மகன் தன் கையால் எடுத்து கொடுத்தது சிறப்பான விடயமாக அமைந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments